என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திங்கள்நகர் நகை கடையில் நகை-பணம் திருட்டு சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளையர்கள் உருவம் சிக்கியது
- சிறிது நேரம் கழித்து பணம் மற்றும் நகைகளை காணாததை கண்ட கருணாநிதி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உரிமை யாளர் ராமை யனுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து கருணாநிதி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- புகாரின் பேரில் சம்பவ இடம் வந்த இரணியல் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக் களை ஆய்வு செய்தனர்.
- அப்போது சி.சி.டி.வி.யில் கொள்ளையர்கள் 2 பேர் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது.
இரணியல், அக்.13-
திங்கள்நகர் அடுத்த பூசாஸ்தான்விளையை சேர்ந்தவர் ராமையன் (வயது 65).
இவர் திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோவில் அருகில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி (55) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று கருணாநிதி கடையில் இருக்கும் போது 2 வாலிபர்கள் வந்து ஒருவர் ராசிக்கல் கேட்டுள்ளார்.
கருணாநிதி எடுத்துக் கொடுக்கும் போது மற்றொரு வாலிபர் கல்லாவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கப்ப ணம் மற்றும் 16 கிராம் தங்க நகைகளையும் எடுத் துள்ளார். பின்னர் அவர்கள் வாங்கிய ராசிக்கல்லுக்கான பணத்தை கொடுத்து விட்டு வாலிபர்கள் சென்றனர்.
சிறிது நேரம் கழித்து பணம் மற்றும் நகைகளை காணாததை கண்ட கருணாநிதி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உரிமை யாளர் ராமை யனுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து கருணாநிதி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடம் வந்த இரணியல் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக் களை ஆய்வு செய்தனர்.
அப்போது சி.சி.டி.வி.யில் கொள்ளையர்கள் 2 பேர் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது.