என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆதிதிராவிடர் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
- மின்வாரிய அதிகாரி வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் கந்திலி ஒன்றியம் நத்தம் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் பி.அருணகிரி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜானகிராமன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வெங்கடாஜலம் கலந்து கொண்டார். சி.செல்வராஜ், தமிழ்ஆசிரியர் கே.விமலா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்வாரிய பொறியாளர் எஸ்.பி. விஜயகுமார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பொருளாளர் தேவராஜன், நிர்வாகச் செயலாளர்பி. சோமு, கே.எம்.சுப்பிரமணியம், கே.எம் டி.சுபாஷ்வக்கீல் ஆர். ஆர். மனோகரன், கலந்து கொண்டு பேசினார்கள் .
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் செயலாளர் பாரதி நன்றி கூறினார்.






