என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டு யானைகளை விரட்ட குழுக்கள் அமைப்பு
    X

    ஏரியில் நின்ற யானைகள். வேடிக்கை பார்க்கும் இடத்தில் டீ விற்பனை நடந்த காட்சி. 

    காட்டு யானைகளை விரட்ட குழுக்கள் அமைப்பு

    • பொதுமக்கள் கூடுவதால் டீ விற்பனை களைகட்டியது
    • யானையை பின் தொடரும் பொது மக்களின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படும்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக 2 காட்டு யானைகள் சுற்றி வருகிறது. யானைகள் நடமாட்டத்தை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    உடன் மாவட்ட வன அலுவலர் நாகசதிஷ் கடிஜாலா, வருவாய் கோட்டாட்சியர் இலட்சுமி, உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார், தாசில்தார் சிவப்பிரகாசம், வனச்சரக அலுவலர் பிரபு, வனத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    யானைகளை வனப்பகு திக்கு விரட்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது அதில் ஒரு குழுவினர் யானை பின் பக்கமாக எந்த பக்கம் நோக்கி செல்கிறது என கண்காணித்து வருகின்றனர்.

    மற்றொரு குழுவினர் யானை முன் பக்கமாக இருந்து எந்த பகுதிக்கு நோக்கி செல்கிறது என கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் 3 குழுவினர் யானை முகாமிட்டுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    யானைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே யானை நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து காட்டு பகுதிக்கு சென்று இருக்கும் பொது மக்கள் யானையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து யானைக்கு தொந்தரவு செய்ததால் தான் அது காட்டிற்குள் செல்ல முடியாமல் ஏலகிரி மலை மலையடிவாரத்தில் நோக்கி வந்தது.

    ஜலகாம்பாறை, ஜடையனூர் மிட்டூர் வழியாக ஆலங்காயம் காப்புக்காட்டு பகுதி வழியாக ஜம்னாமரத்தூர் வனப்பகுதிக்கு சென்று விடும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில் 5-வது நாளான இன்று அதிகாலை வெங்காயப்பள்ளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் கருப்பனூர் அன்னான்டபட்டி பகுதி வழியாக லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஏரியில் குளித்து விட்டு முகாமிட்டுள்ளது.

    இதனால் ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து யானை இன்று திருப்பத்தூர் நோக்கி சென்றது.

    அப்போது பொது மக்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்தனர். அங்கு டீ வியாபாரம் களை கட்டியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக யானை ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர். யானை காட்டு பகுதிக்கு சென்றால் தான் பொது மக்கள் நிம்மதி கிடைக்கும்.

    யானை பின் தொடரும் பொது மக்களின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்து உள்ளார்.

    Next Story
    ×