search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்ட பகலில் காரில் குடும்பத்துடன் வந்து ஆடுகள் திருட்டு
    X

    பட்ட பகலில் காரில் குடும்பத்துடன் வந்து ஆடுகள் திருட்டு

    • பிஸ்கட் கொடுத்து துணிகரம்
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணமேடு ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

    இந்த ஆடுகள் காலை நேரத்தில் மெய்சலுக்காக அவிழ்த்து விடுகின்றனர். அந்த ஆடுகள் சாலைகளில் உணவு தேடி மாலைநேரத்தில் வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

    இன்று காலை ஆசிரியர் நகர், முதல் குறுக்கு தெருவில் ஆடுகள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.அப்போது அவ்வழியாக காரில் குடும்பத்துடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் காரை நிறுத்தி குழந்தைக்கு ஆடுகளை காண்பித்து ஆட்டுக்கு பிஸ்கெட் கொடுப்பது போல் நாடகமாடி ஒரு ஆட்டை காரில் தூக்கி போட்டனர். இதே போல் 4 ஆடுகளை திருடி காருக்குள் போட்டுககொண்டு சென்றனர்.

    இதனை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தன் வீட்டுக்கு எதிரில் வெகு நேரமாக கார் நின்று ஆடுகளை திருடுவது கண்டு தன்னுடைய செல்போனில் வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைத்த ளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலா னதால் வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த கார் காலை 9 மணிக்கு பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை கடந்து வாணியம்பாடி நோக்கி வந்த காட்சிகள் நெக்குந்தி டோல் கேட் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசி டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே ஆடுகளை திருடி சென்ற கும்பல் வெளியூறை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    Next Story
    ×