என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் மண்டல பூஜை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் மண்டல பூஜை](https://media.maalaimalar.com/h-upload/2023/01/01/1815503-.webp)
ஜோலார்பேட்டையில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் மண்டல பூஜை நடைபெற்றது.
ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் மண்டல பூஜை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை பகுதியில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா முன்னிட்டு நேற்று 15 நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியில் உள்ள வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் கடந்த 11 ம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் 15 ம் நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது விழாவையொட்டி நேற்று முன்தினம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது.
மண்டல பூஜை விழா முன்னிட்டு கோயம்புத்தூர் கிளாசிக் அன்பு மற்றும் இவரது குடும்பத்தினர் சார்பாக கலந்து கொண்ட சுமார் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை எக்ஸெல் ஜி.குமரேசன், ரைஸ் மில் உரிமையாளர் ராஜா ஹார்டுவேர்ஸ் ராஜேந்திரன் மற்றும் வீர ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.