search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிரீன் சர்க்கிளில் நெரிசலை குறைக்க சாலை விரிவாக்கம்
    X

    கிரீன் சர்க்கிளில் நெரிசலை குறைக்க சாலை விரிவாக்கம்

    • கதிர் ஆனந்த் எம்.பி. நடவடிக்கை
    • ரூ.7.76 கோடி ஒதுக்கீடு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி யின் மையப்பகுதியாக கிரீன் சர்க்கிள் உள்ளது. இப்பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் அதனை சரி செய்வதற்கு பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன.

    நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் அனுமதி ஆய்வுக்கு பின்னர் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவை குறைப்பதுடன் அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டது.

    ஆனால் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.

    இதையடுத்து வேலூர் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவை குறைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு பரிந்துரை அனுப்ப ப்பட்டது.

    மேலும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம் கதிர் ஆனந்தும் இது தொடர்பாக மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

    இந்த கோரிக்கைகளை ஏற்று ரூ.7.76 கோடி செலவில் கிரீன் சர்க்கிள் பூங்காவின் அளவு மாற்றியமைப்பது, வடிகால் மற்றும் பாதுகாப்பு பலகைகள் உள்பட அப்பகுதியிலுள்ள சர்வீஸ் சாலையை விரிவாக்கம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

    மேலும், இதற்கான ஏல ஆவணங்களை அடுத்த 4 நாள்களுக்குள் தயார் செய்து அளிக்க தனியார் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. கூறுகையில்:- 2019-ம் ஆண்டு வேலூர் மக்களவைத் தேர்த லின்போது போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேலூர் கிரீன்சர்க்கிள் பூங்காவின் அளவை குறைக்கவும், சர்வீஸ் சாலைகளை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தி ருந்தேன்.

    அதனை நிறைவேற்றும் விதமாக தற்போது பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சா லைத்துறை ஆணை யம் ஒப்புதல் அளித்துள்ளது என கூறினார்.

    Next Story
    ×