என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
திருப்பூரில் ஸ்மார்ட்போன் கேட்டு மாற்றுத்திறனாளிகள் 100 பேர் விண்ணப்பம்

- முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் 86 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல்களை இணைத்து விண்ணப்பம் அளித்தனர்.
திருப்பூர் :
காதுகேட்காத, வாய்பேசாத மற்றும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் 86 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக ஸ்மார்ட் போன் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார். பார்வையற்றோர் சங்க பிரதிநிதி சக்கரையப்பன், காதுகேளாதோர் சங்க பிரதிநிதி ரமேஷ் முன்னிலை வகித்தனர்.திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல்களை இணைத்து, ஸ்மார்ட் போனுக்கான விண்ணப்பம் அளித்தனர். மொத்தம் 100 பேர் ஸ்மார்ட் போன் கேட்டு விண்ணப்பித்தனர்.