search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உணவக உரிமையாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் 11-ந்தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    உணவக உரிமையாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் 11-ந்தேதி நடக்கிறது

    • உணவு அருந்திய பின்னா் வழங்கப்படும் பில்லில் சேவை வரி விதிக்கக் கூடாது என்று சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
    • சேவை வரி விதிக்கக் கூடாது தொடா்பான உரிய வழிகாட்டுதல்கள் தெரியப்படுத்தப்படவுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவக உரிமையாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது.இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உணவகங்களில் உணவு அருந்திய பின்னா் வழங்கப்படும் பில்லில் சேவை வரி விதிக்கக் கூடாது என்று நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 2019 உட்பிரிவு 18 (2) (1)- இன்படி கடந்த ஆகஸ்ட் 4 ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் சேவை வரி விதிக்கக் கூடாது தொடா்பான உரிய வழிகாட்டுதல்கள் தெரியப்படுத்தப்படவுள்ளன. இது தொடா்பான கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவக உரிமையாளா்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×