search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபுதூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்  27-ந்தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்

    ஆண்டிபுதூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் 27-ந்தேதி நடக்கிறது

    • ஆண்டிபுதூர் கிராமத்தில் முதல் முகாம் நடத்தப்படவுள்ளது.
    • பரிசு வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 3 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து இம்முகாம்கள் கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் சார்பில் வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 8 மணிக்கு குண்டடம் ஊராட்சி ஒன்றியம், குறுக்கபாளையம் ஊராட்சி ஆண்டிபுதூர் கிராமத்தில் முதல் முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாம்களால் கால்நடைகளுக்கு இலவசமாக அளிக்கப்படும் சிகிச்சையின் விவரங்கள் பின்வருமாறு:-

    குடற்புழு நீக்கம், நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி மற்றும் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ,சினை பிடிக்காமல் இருக்கும் கிடாரி கன்றுகளுக்கு தாது உப்புக்கலவை வழங்குதல், இலவச நோய் சிகிச்சைப்பணிகள், நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் அளித்தல், கால்நடைகளுக்கு கர்ப்பபை தொடர்பான சிகிச்சைப்பணிகள், செயற்கை முறை கருவூட்டல் பணி, நுண்கதிர் மூலம் சினை பரிசோதனை செய்தல், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு நடவடிக்கைகள்,நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு ரத்தம் மற்றும் இதர மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்புதல், கால்நடைகளுக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவை (1962),விவசாயிகளுடன் கருத்தரங்கு மற்றும் கால்நடை பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் கலந்துரையாடல், சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசு , சிறந்த கால்நடை தொழிற்நுட்ப விவசாயிகளுக்கு பரிசு வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. மேற்படி முகாமில் விவசாயிகள் மற்றும் கால்நடைவளர்ப்போர் பங்கு பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×