search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டல் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்பு ஆதிதிராவிட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்.

    ஓட்டல் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்பு ஆதிதிராவிட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

    • ஒன்றியஅரசின் சுற்றுலா துறையின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனம் .
    • ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு பட்டயப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    தாட்கோ மூலமாக 10- ம்வகுப்பு மற்றும் 12-ம்வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு B.Sc (Hospitality -amp, HotelAdministration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புசேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வாழ்வாதாரத்தினைமேம்படுத்திக் கொள்ள கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.

    சென்னை தரமணியிலுள்ள இன்ஸ்ட்டியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட்கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைய்டு நியுட்ரிஷயன் நிறுவனமானது ஒன்றியஅரசின் சுற்றுலா துறையின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனம் .சர்வதேசஅங்கீகாரம் பெற்ற இந்நிறுவனத்தில் 12-ம் வகுப்பு முடித்தவர் ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியின இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பி.எஸ்சி இளநிலை பட்டப்படிப்பும்,ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு பட்டயப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது. அதேபோன்று பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டு காலை உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் படிப்பும் வழங்கப்படுகிறது.

    இதில் சேர விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தமாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம்வகுப்பில்குறைந்தது 45 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆரம்பகாலபி.எஸ்சி படிப்பில் சேருவதற்கு தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் .அத்தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும்.தேர்வுக்கு வரும் 27.4.2023-ந் தேதிக்குள் விண்ணப்பித்தல் அவசியம்.

    இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் www.tahdco.com என்ற இணையத்தில்பதிவு செய்ய வேண்டும். எனவே திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் இதுகுறித்து மேலும் தகவல்களை அறிய திருப்பூர் தாட்கோ மாவட்ட மேலாளரை நேரிலோஅல்லது தொலைபேசியிலோ 044-2971112 அனுகி தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×