search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எந்த ஒரு செயலும் அடுத்தவர் சுதந்திரத்தை பாதிக்காதவாறு இருக்க வேண்டும் - மாணவர்களுக்கு வக்கீல்கள் அறிவுறுத்தல்
    X

    சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற காட்சி. 

    எந்த ஒரு செயலும் அடுத்தவர் சுதந்திரத்தை பாதிக்காதவாறு இருக்க வேண்டும் - மாணவர்களுக்கு வக்கீல்கள் அறிவுறுத்தல்

    • பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் ராகிங் எதிர்ப்பு என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • விளையாட்டாக ஆரம்பிக்கும் கேலி கிண்டல்கள் அடுத்தவர்களின் மனதை புண்படுத்துவதிலிருந்து ராகிங் என்பது உருவாகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு "பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் ராகிங் எதிர்ப்பு" என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர். ரேச்சல் நான்சி பிலிப் வரவேற்புரை வழங்கினார்.

    இதில் சட்ட உதவி மைய வக்கீல் தி பிரகாஷ் பேசியதாவது:, சிறு விளையாட்டாக ஆரம்பிக்கும் கேலி கிண்டல்கள் அடுத்தவர்களின் மனதை புண்படுத்துவதிலிருந்து ராகிங் என்பது உருவாகிறது. அதன் உச்ச கட்டம் தான் நாவரசு கொலை வழக்கு .எனவே எந்த ஒரு செயலும் அடுத்தவர் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார். அந்தோணி ஷர்லின், பெண்களுக்கு அவசியமான மற்றும் பாதுகாப்பான சட்டங்கள் பற்றி விளக்கினார். ராஜசேகரன், சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் குற்றங்கள் பற்றியும் விழிப்புணர்வுடன் இருந்து தற்காத்து கொள்வது பற்றியும் விளக்கினார். தலைமையுரை ஏற்று பேசிய திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மேகலா மைதிலி , எந்த ஒரு செயலையும் செய்யும் முன்பு அது நம்மையும், நம்மை சார்ந்துள்ள குடும்பத்தாரையும் எண்ணி பார்த்து செயலாற்றிட வேண்டும். நம்மை மீறி எந்த ஒரு கெடுதலான விஷயமும் நடக்காதவாறு விழிப்புணர்வுடனும் கவனமுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் மாணவி ஷிபானா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பேராசிரியர் ராதாமணி ஆகியோர் செய்திருந்தனர். இதில் 70க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    Next Story
    ×