search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் நகராட்சியில் நகரமைப்பு அலுவலர் நியமனம்
    X

    கோப்புபடம்.

    பல்லடம் நகராட்சியில் நகரமைப்பு அலுவலர் நியமனம்

    • பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகளில் சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
    • தொழிலாளர்கள் பலர் குடிபெயர்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகளில் சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விசைத்தறி, கறிக்கோழி பண்ணைகள், பனியன் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றை சார்ந்த தொழிலாளர்கள் பலர் குடிபெயர்கின்றனர்.இதனால் பல்லடம் நகரின் மக்கள் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் பல்லடம் இன்னும் பின்தங்கியே உள்ளது.

    அந்தவகையில் பல்லடம் நகராட்சிக்கு இதுவரை நகரமைப்பு அலுவலர் நியமிக்கப்படாததால், அருகில் உள்ள நகராட்சிகளின் நகரமைப்பு அலுவலர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தனர். இதனால் பல்லடத்தில் கட்டிட வரைபட அனுமதி, நகர பகுதியில் விதிமீறல் கட்டடங்கள் குறித்த ஆய்வு உள்ளிட்ட பணிகள் மிகுந்த காலதாமதம் ஆனது. இதற்கிடையே தற்போது நகர அமைப்பு அலுவலராக ரவிச்சந்திரன் என்பவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் நிலை நகராட்சியில் இருந்த பல்லடம் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது முதல் நகர அமைப்பு அலுவலர் நியமிக்கப்படவில்லை.தற்போது நீண்ட காலத்துக்கு பின் நகர அமைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இனியாவது கட்டிட வரைபட அனுமதி உள்ளிட்ட பணிகள் விரைவாக நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

    Next Story
    ×