search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் நொய்யல் ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு
    X

    ஆரத்தி எடுத்த காட்சி

    திருப்பூரில் நொய்யல் ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு

    • நொய்யல் ஆறு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ரத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்
    • 4 தனியார் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு நொய்யல் ஆற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    திருப்பூர்,

    அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் மற்றும் நொய்யல் ஆறு டிரஸ்ட் சார்பில் கோவையில் நடைபெற உள்ள நொய்யல் பெருவிழாவையொட்டி அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்த மகராஜ் வழிகாட்டுதலின்படி, சந்நியாசிகள் இணைந்து நொய்யல் ஆறு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ரத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். ரதத்தில் நொய்யல் அம்மன் எழுந்தருளினார். ரத யாத்திரை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் தொடங்கி நொய்யல் ஆற்றின் கரையோரமாக சென்று வழிநெடுகிலும் உள்ள மக்களுக்கு சந்நியாசிகள் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

    திருப்பூர் மாநகருக்குள் நேற்று வந்தடைந்த ரத யாத்திரை குழுவினர் திருப்பூரில் உள்ள 4 தனியார் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு நொய்யல் ஆற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து திருப்பூரில் நொய்யல் ஆற்றுக்கு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. திருப்பூர் ெநாய்யல் வீதி வளம் பாலத்தில் நொய்யல் ஆற்றுக்கு பால், மஞ்சள் நீர், மலர்களால் ஆரத்தி வழிபாடு செய்யப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில பாரதீய சந்நியாசிகள் சங்க பொறுப்பாளர் பாரதி, திருப்பூர் ஸ்ரீராம கிருஷ்ணா வித்யாலயா பள்ளி தாளாளர் முத்துக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×