என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அத்திக்கடவு-அவிநாசி திட்ட சோதனை ஓட்டம் குளம், குட்டைகளில் தண்ணீர் வழிந்தோடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
- துறை ரீதியாக வெள்ளோட்டம் பார்க்கும் பணி நடந்து வருகிறது.
- சோதனை ஓட்டத்தின் போது வரப்பாளையம் பகுதியில் 5-வது நீரேற்ற நிலையத்துக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது.
திருப்பூர் :
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் 60 ஆண்டு கடந்த கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நிறைவு பெற்று தற்போது துறை ரீதியாக வெள்ளோட்டம் பார்க்கும் பணி நடந்து வருகிறது.திறந்துவிடப்படும் தண்ணீர் பாப்பாங்குளம், குன்னத்தூர், வரையபாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குளம், குட்டைகளில் வழிந்தோடுகிறது. இதனால் விவசாயிகள், அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் மற்றும் அத்திக்கடவு ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சோதனை ஓட்டத்தின் போது வரப்பாளையம் பகுதியில் 5-வது நீரேற்ற நிலையத்துக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது.பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில் செங்கோட்டையன் பார்வையிட்டார். நீர் வளத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனத்தினர் சோதனை ஓட்ட செயல்பாடு குறித்து விளக்கினர்.