என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பயங்கர ஆயுதங்களுடன் பனியன் நிறுவனத்துக்குள் புகுந்து தாக்குதல் - 8 பேர் கும்பல் கைது
Byமாலை மலர்14 March 2023 4:17 PM IST
- இருதரப்புக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
- பனியன் நிறுவனத்துக்குள் கட்டை, கத்தி ஆகியவை எடுத்து கொண்டு அத்துமீறி நுழைந்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் ராதா நகரை சேர்ந்தவர் அபிஷேக் ( வயது 21). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வேலை செய்யும் தமிழ்செல்வம் என்பவர் பனியன் நிறுவனத்துக்கு வெளியே நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வசந்த், ரமணா, முரளி ஆகியோர் தமிழ்செல்வத்தை உரசுவது போல் சென்றனர்.
இதனால் இருதரப்புக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதன்பின் மூவரும் தனது நண்பர்கள் சிலரை அழைத்து பனியன் நிறுவனத்துக்குள் கட்டை, கத்தி ஆகியவை எடுத்து கொண்டு அத்துமீறி நுழைந்தனர். வாக்குவாதம் தொடர்பாக, அங்கிருந்தவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் கேசவன், ரமணா, அருண்குமார், மோகன்ராஜ், தனுஷ்,வசந்த், சந்துரு, முரளி என 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
Next Story
×