search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பது குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
    X

    கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி விண்ணப்பம் வழங்கிய காட்சி.

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பது குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

    • சிறப்பு முகாம்களில் படிவம் 6 பி பூர்த்தி செய்து ஆதார் எண் இணைக்க விண்ணப்பிக்கலாம்.
    • வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கருடா செயலி மூலமாக ஆதார் இணைக்க தகுந்த ஒத்துழைப்பு வழங்கலாம்.

    திருப்பூர் :

    இந்திய தேர்தல் ஆணையமானது 1950 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தம் செய்யப்பட்டு 17-6-2022 அரசிதழ் பிரசுரிப்பின்படி எதிர்வரும் 31-3-2023-க்குள் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண் விவரங்களை இணைக்க வழிவகை செய்துள்ளது. வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் விவரங்களை பெறுதல் என்பது முழுவதும் வாக்காளர்களின் தன் விருப்பத்தின் அடிப்படையிலானது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 1-8-2022 முதல் 31-3-2023-க்குள் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்தல் என்பது வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் செம்மைபடுத்துவதற்கும், வாக்காளர்களின் தனித்தகவல்களை உறுதிபடுத்துதல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதிக்குள், ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியில் இடம்பெறாமல் இருப்பதற்காவும் ஆகும். வாக்காளர்கள் இணையதளத்தில் என்.வி.எஸ்.பி. போர்டல் மற்றும் வோடர் போர்டல் மூலமாகவும், வோடர் ஹெல்ப் லைன் ஆப் செயலி மூலமாகவும் தாங்களாகவே ஆதார் இணைப்பு மேற்கொள்ளலாம். மாறாக வாக்காளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆதார் எண் இணைப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கலாம். இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் இணைப்பு தொடர்பாக படிவம் 6பி என்ற விண்ணப்பத்தினை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

    சிறப்பு முகாம்களில் படிவம் 6 பி பூர்த்தி செய்து ஆதார் எண் இணைக்க விண்ணப்பிக்கலாம். தங்களது பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கருடா செயலி மூலமாக ஆதார் இணைக்க தகுந்த ஒத்துழைப்பு வழங்கலாம். ஆதார் எண்ணுக்கு பதிலாக, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி அஞ்சலக புகைப்படத்துடன் கூடிய புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட அட்டை, கடவு சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, சமூக நலத்துறையினரால் வழங்கப்பட தனி அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றியை சமர்ப்பிக்கலாம்.

    எனவே வருகிற 31-3-2023க்குள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் தங்களது, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ இணைக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி, தெற்கு சட்டமன்ற தொகுதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரியில் சிறப்பு முகாம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்தது. கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தல் தாசில்தார் கலைவாணி மற்றும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×