என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதி பனியன் தொழிலாளி பலி
    X

    லாரி மோதி பனியன் தொழிலாளி பலி

    • நண்பர் ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    • துரைசாமி பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் துரைசாமி ( வயது 27) . இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் உணவு இடைவேளைக்காக வீட்டிற்கு செல்வதற்கு, மோட்டார் சைக்கிளில் இவருடன் பணிபுரியும் ஸ்டாலின் என்பவருடன் சென்றுள்ளார்.

    பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில் செல்லும்போது அய்யம்பாளையம் பிரிவில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த துரைசாமியை அக்கம்- பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி துரைசாமி உயிரிழந்தார். இது குறித்து அவரது நண்பர் ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×