search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி  கழகம் மூலம் கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகை செலுத்தினால் வட்டி தள்ளுபடி
    X

    கோப்புபடம்

    தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மூலம் கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகை செலுத்தினால் வட்டி தள்ளுபடி

    • கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ, மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும்.
    • பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

    திருப்பூர்:

    தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக்கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12 ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

    தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ, மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும்.

    இத்திட்டம் 31.12.2023 வரை செயல்படுத்தப்படும் எனவும் மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 மற்றும் 503, 5 -வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், செல்போன் எண்: 94450 29552, தொலைபேசி எண்: 0421-2971112 மூலம் பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×