என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரும்பாளி அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு
- 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி வீடு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
- ரூ. 3.08 லட்சத்தை பயனாளிகள் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.
திருப்பூர்,அக்.24-
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திருப்பூா் கோட்டம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சி கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாளி கிராமத்தில் உயா்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அருகே, 8 தளங்களுடன், 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி வீடு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு பயனாளிகள் தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ. 3.08 லட்சத்தை பயனாளிகள் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.
பயனாளிகள் திருமணமானவராகவும், நகராட்சி பகுதிக்குள் வசிப்பவராகவும், ஆண்டு வருமானம், ரூ.3 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும். பயனாளி மற்றும் குடும்ப உறுப்பினருக்கு சொந்த வீடு, வீட்டுமனை இருக்கக் கூடாது. குடும்பத் தலைவா் மற்றும் உறுப்பினா்களின் ஆதாா் அட்டை, பயனாளியின் புகைப்படம், ரேஷன் காா்டு நகல், வாக்காளா் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் நவம்பா் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், இது குறித்து தொடா்புக்கு 9626727628 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது