search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனதை ஒருமைப்படுத்தினால்  பக்தியை எதிலும் காணலாம்  ஆன்மீக சொற்பொழிவாளர் பேச்சு
    X

    மனதை ஒருமைப்படுத்தினால் பக்தியை எதிலும் காணலாம் ஆன்மீக சொற்பொழிவாளர் பேச்சு

    • பக்தி உள்ளவன் உலகில் எந்தக் கடவுளையும் வணங்கலாம்.
    • ராமாயணத்திற்கு முன்பே ராம நாமம் தோன்றியது வால்மீகியால் தான்.

    அவிநாசி :

    அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஆன்மீக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:- பக்தி என்பது மதங்களுக்கு ம், ஜாதிகளுக்கும் அப்பாற்பட்டது. பக்தி உள்ளவன் உலகில் எந்தக் கடவுளையும் வணங்கலாம். எங்கு வேண்டுமானாலும் பிறந்திருக்கலாம்.

    ராம நாமத்தை ஜெபிக்க இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மனதை ஒருமைப்படுத்தி னால் பக்தியை எதிலும் காணலாம். கல்வியறிவு துளியும் இல்லாத ஒரு வேடர் தான் மகரிஷி வால்மீகி என்பது பலருக்கும் தெரியாது. ராமாயணத்திற்கு முன்பே ராம நாமம் தோன்றியது வால்மீகியால் தான்.

    பக்திக்கு எப்படி மதங்கள் தடையில்லையோ அதே போல தான் மொழிகளும். பல மொழிகளையும் கற்று உணர்ந்த பாரதி தமிழைப் போன்றதொரு மொழி இல்லை. கற்ற மொழியிலேயே தமிழ் தான் சிறந்தது என்று கூறுகிறார். இவ்வாறு கல்யாணராமன் பேசினார்.

    Next Story
    ×