search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்னை நார் தொழிலை வெள்ளை வகைப்பாட்டுக்கு மாற்ற வேண்டும் - உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    தென்னை நார் தொழிலை வெள்ளை வகைப்பாட்டுக்கு மாற்ற வேண்டும் - உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

    • தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.
    • தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 2,000 கோடிக்கு அன்னிய செலவாணி ஈட்டப்படுகிறது.

    உடுமலை :

    இந்தியாவில் 14 மாநிலங்களில் 23 ஆயிரத்து க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 10 லட்சத்துக்கும் அதிகமா னோர் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் இருந்து 125 நாடுகளுக்கு 250க்கும் மேற்பட்ட தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 2,000 கோடிக்கு அன்னிய செலவாணி ஈட்டப்படுகிறது. தவிர நாட்டில் 30 மாநிலங்களுக்கு உள்நாட்டு தேவைக்காக இப்பொருட்கள் விற்கப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக உலகப்பொ ருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகளால் இத்தொழில்மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளை வகைப்பாட்டிலில் இருந்து ஆரஞ்சு பிரிவுக்கு மாற்ற ப்பட்டதால் தொழில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து உடுமலை தென்னை நார் உற்பத்தி யாளர்கள் கூறியதாவது:- தென்னை நார் தொழிலால் மாசு ஏற்ப டுவதாக டில்லி பசுமை தீர்ப்பாயத்தில் சிலர் மனு தாக்கல் செய்தனர். அதன் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டது. அதில் வெள்ளை வகைப்பாட்டில் இருந்த தொழில் ஆரஞ்சுக்கு மாற்றப்பட்டது. இதற்கான நோட்டீஸ்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக வழங்கப்பட்டது.

    பழைய முறைப்படியே வெள்ளை வகைப்பா ட்டுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும்பாதிப்புகள் குறித்து அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளோம். அவர்களும் முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்றுநடவடிக்கை எடுப்பதாக உறுதியளி த்துள்ளனர். இந்நிலையில் உண்மைக்குமாறான தகவல்களை யாரும் பரப்பவேண்டாம்.இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.'டான் காயர்' ஆலோசனைக்குழு உறுப்பினர் கவுதமன் கூறுகையில், ''உண்மைக்கு மாறான தகவல்கள் பரவி வருகின்றன. வெள்ளை வகைப்பாட்டுக்கு மாற்ற வேண்டுமென அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. தென்னை நார் இயற்கையாக உண்டாகக்கூடிய பொருள். எவ்வித கெமிக்கலும் சேர்ப்பதில்லை. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. மின் கட்டணத்தை ஒரே நேரத்தில் உயர்த்துவதால் தொழில் பாதிக்கப்படுகிறது. இது குறித்து அரசு ஆலோசித்து தொழில் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×