என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காண்டூர் கால்வாயில் தொடரும் தண்ணீர் திருட்டு
- திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி., 4 ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் உபயோகிக்கப்பட்டு வருகிறது.
- சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி., 4 ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் உபயோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது.
கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க வருவாய் துறை, காவல் துறை, நீர் வள ஆதாரத்துறை, விவசாயிகள், மின் துறை அதிகாரிகள் போன்ற கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவினரும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
இருந்தாலும் காண்டூர் கால்வாயில் தண்ணீர் திருட்டு தொடர்கிறது. பிவிசி., பைப்புகள் கால்வாயில் போட்டு மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் . எனவே தீவிரமாக கண்காணித்து தண்ணீர் திருடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.