என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாராபுரம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்
- குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் சின்டெக்ஸ் புதிதாக அமைத்து தர வேண்டும் .
- பிபிஎல் லிஸ்ட் மத்திய அரசு வழிகாட்டுதலின் படி முடிவு செய்யப்படும்.
தாராபுரம் :
தாராபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் சேர்மன் பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ரவிச்சந்திரன், கமிஷனர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
முபாரக் அலி (தி.மு.க.):- எனது வார்டில் 78 வறுமைக்கு கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பதிவிற்காக விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதுவரை அதன் மேல் என்ன நடவடிக்கை. தாராபுரம் நகராட்சி வணிக வளாகத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய தொழில் செய்பவர்கள் அனுமதி வாங்காமல் கடையை நடத்துகிறார்கள்.நடவடிக்கை எடுக்கப்படுமா?.
தலைவர்:- பிபிஎல் லிஸ்ட் மத்திய அரசு வழிகாட்டுதலின் படி முடிவு செய்யப்படும் .அனுமதி இல்லாமல் தீ தொடர்பான தொழில் செய்பவர்கள் மீது விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் .
கல்பனா (அ.தி.மு.க.):- கோடை காலம் வருவதால் எனது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் சின்டெக்ஸ் புதிதாக அமைத்து தர வேண்டும் .
தலைவர்:- தேவைப்படும் இடங்கள் பற்றிய விவரம் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சீனிவாசன்(தி.மு.க.):- குடிநீர் பராமரிப்புக்காக தற்காலிக பணியாளர்கள் நியமனம் பற்றி தீர்மானம் வந்துள்ளது. இதை நிரந்தர பணியாளராக போட வேண்டும்.
தலைவர்:- இனி எல்லாமே சென்சார் முறையில் குடிநீர் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதுவரை மட்டுமே நமக்கு ஆட்கள் தேவை என்பதால் இந்த நடவடிக்கை.
கமலக்கண்ணன் (தி.மு.க.):- நமது நகராட்சி அலுவலகத்தில் கட்டிட பிரிவில் டெவலப்மெண்ட் ஏரியா 14 என்ற மேப்பை காணவில்லை. இதிலிருந்து தான் மற்ற பகுதிகளை அடையாளம் கண்டு கட்டிட அனுமதி வழங்கவேண்டும். எனவே நடவடிக்கை தேவை
தலைவர்:- .டி.பி.ஓ. என்னிடம் இது பற்றி தகவல் கூறியுள்ளார். சென்னையில் நகல் கேட்டு விண்ணப்பித்து பெற நடவடிக்கை எடுக்கப்படும் .
நாகராஜ் (அ.தி.மு.க.):- நகராட்சி பணிகள் மக்களை சென்றடையவில்லை என தி.மு.க. கவுன்சிலர்களே நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவது பற்றி புகார் கூறி உள்ளனர். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்று இது காட்டுகிறது.
தலைவர்:- வார்டு பிரச்சினை மட்டும் கூறுங்கள். எல்லாம் சரியாகத்தான் நடந்து வருகிறது .
அ.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜ் கூறிய குற்றச்சாட்டிற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்ச லிட்டதால் சபையில் பரபரப்பு நிலவியது.
ஸ்ரீதரன்(தி.மு.க.):- எனது வார்டில் பைபாஸ் ரோட்டில் குப்பைகளை எரிப்பதால் குடியிருப்பு பகுதிகளில் மூச்சு திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை எரிப்பதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்:- குப்பைகளை அள்ளுவதற்கு பதில் தீ வைத்து விடுகிறார்கள். இது சரியான முடிவு அல்ல.கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.தாராபுரம் நகராட்சி ஸ்பெஷல் கிரேடாக தரம் உயர்த்தப்பட்டதற்கும் ஜூன் மாதத்தில் இருந்து நகராட்சி பகுதியில் அரசு சார்பில் காலை அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்குவதற்கு அனுமதி அளித்த அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்