என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம் நடைபெற்ற காட்சி.
உடுமலையில் 'திராவிட மாடல்' பயிற்சி பாசறை கருத்தரங்கம்
- ஒரு நாள் கருத்தரங்கம் நடை பெற்றது.
- திராவிட இயக்க வரலாறுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை தி.மு.க. இளைஞரணி சார்பில் உடுமலை ராசி திருமண மண்டபத்தில் 'திராவிட மாடல்' பயிற்சி பாசறை ஒரு நாள் கருத்தரங்கம் நடை பெற்றது.
அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.ஜெயக்குமார் வரவேற்றார். இதில் திராவிட இயக்க வரலாறுகள் குறித்து பேராசிரியர் சபாபதி மோகன், பேராசிரியர் கான்ஸ்டைன், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன், தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த 420 பேர் கலந்து கொண்டனர்.
Next Story






