என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
    X

    கோப்புபடம்

    அவினாசியில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

    • மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி அலுவலகத்தில் நடக்கிறது.
    • குறைகளை நேரில் மனுவாக வழங்கி நிவர்த்தி பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

    திருப்பூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சார்பில் வருகிற 9-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி அலுவலகத்தில் நடக்கிறது.

    இதில் மின் நுகர்வோர்களின் மின் தொடர்பான குறைகளை மின் பொறியாளர் நேரில் ேகட்டறிகிறார்.எனவே மின் நுகர்வோர் தங்களது மின் தொடர்பான குறைகளை நேரில் மனுவாக வழங்கி நிவர்த்தி பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை அவினாசி மின் வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×