search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை  பிடிக்கும் பணி தீவிரம்
    X

    ஊழியர்கள் தெருநாய்களை பிடித்த காட்சி.

    திருப்பூர் மாநகர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்

    • தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வார்டு கவுன்சிலர் முதல் பொதுமக்கள் வரை புகார் அளித்து வந்தனர்.
    • கடந்த 3 தினங்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து சென்றுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக தெரு நாய்கள் இருந்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்களால் விரட்டி விரட்டி கடிக்கும் சம்பவம் திருப்பூர் மாநகர் பகுதியில் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனால் திருப்பூர் மாவட்ட மருத்துவமனையில் தினமும் ஏராளமானோர் நாய் கடிக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்தநிலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வார்டு கவுன்சிலர் முதல் பொதுமக்கள் வரை மாநகராட்சிக்கு புகார் அளித்து வந்தனர். பொதுமக்களின் இந்த புகாரை அடுத்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில் தனியார் நிறுவனம் மூலம் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்துக்கு உட்பட்ட 13, 24, 22 வார்டுகளில் உள்ள பிச்சம்பாளையம் பிரிவு சிங்காரவேலன் நகர் , அங்கேரிபாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் தெரு நாய்களை பிடித்து வருகின்றனர்.

    அதன்படி கடந்த 3 தினங்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து சென்றுள்ளனர். இது பொதுமக்கள் இடையே சற்று ஆறுதல் பெற்றுள்ளது. தொடர்ந்து மாநகர் முழுவதும் இது போன்ற தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×