search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் முழுமையாக ஈடுபடுங்கள் - தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் அறிக்கை
    X

    கோப்பு படம்.

    வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் முழுமையாக ஈடுபடுங்கள் - தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் அறிக்கை

    • வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் தி.மு.க.வினர் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
    • நேரடியாக பூர்த்தி செய்து கொடுத்தமைக்கு ஒப்புகை சீட்டு தங்களிடம் இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லையெனில் புகார் அளிக்க வசதியாக இருக்கும்.

    திருப்பூர்:

    வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் தி.மு.க.வினர் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு சிறப்பு முகாம் அடுத்த மாதம் 4-ந் தேதி, 5-ந் தேதி, 18-ந் தேதி, 19-ந் தேதி ஆகிய நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் இறுதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    1-1-2024 அன்று 18 வயது நிரம்பி அதாவது 1-1-2006-ம் நாளுக்கு முன் பிறந்து இருக்க வேண்டும். புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தங்களை மேற்கொள்வதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்களையும், புதிதாக குடி பெயர்ந்துள்ள வாக்காளர்களின் பெயர்களையும வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    வருகிற 27-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு அந்தந்த வாக்குச்சாவடி அமைவிட அலுவலரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுத்து அற்கான ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ளலாம். இதுமட்டுமின்றி ஆன்லைன் மூலமும் www.nvsp.இந்த மற்றும்Voters helpline App-ல் பதிவு செய்து குறுஞ்செய்தி மூலம் பதிவை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு ஆன்லைனை பயன்படுத்தி வாக்காளர் சேர்ப்பது மட்டுமில்லாமல் இறந்து போன வாக்காளரை நீக்கலாம். ஆன்லைனை பயன்படுத்தி படிவங்களை பதிவேற்றம் செய்து ஒருவர் எத்தனை வாக்காளர்களை வேண்டுமானாலும் நீக்கலாம். அவ்வாறு செய்ய விரும்புவோர் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

    நேரடியாக பூர்த்தி செய்து கொடுத்தமைக்கு ஒப்புகை சீட்டு தங்களிடம் இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லையெனில் புகார் அளிக்க வசதியாக இருக்கும். சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, ஊர் கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் மற்றும் கட்சியினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×