search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டுக்கூடு விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு
    X

    கோப்புபடம்.

    பட்டுக்கூடு விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு

    • பட்டு புழுவிற்கு உணவான மல்பெரி 44 ஆயிரத்து 417 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • 22,269 விவசாயிகள் பட்டு புழு வளர்ப்பு மனை அமைத்து, கூடு உற்பத்தி செய்து வருகின்றனர்.

    உடுமலை :

    தமிழகத்தில் பட்டு கூடு உற்பத்தி வளர்ச்சியடைந்து வரும் தொழிலாக உள்ளது. இங்கு 22 ஆயிரத்து 269 விவசாயிகள் பட்டு புழு வளர்ப்பு மனை அமைத்து, கூடு உற்பத்தி செய்து வருகின்றனர்.பட்டு புழுவிற்கு உணவான மல்பெரி 44 ஆயிரத்து 417 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உடுமலை, பொள்ளாச்சி, பழநி, பல்லடம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெண் பட்டுக்கூடு உற்பத்தி பிரதானமாக உள்ளது.

    தமிழகத்தில் தினமும் சராசரியாக 10 ஆயிரம் கிலோ பட்டுக்கூடு உற்பத்தி யாகிறது. மாநில பட்டு வளர்ச்சித்து றை சார்பில் அமைக்க ப்பட்டுள்ள, 8 விற்பனை கூடங்கள் மற்றும் கர்நாடக மாநில மார்க்கெட்களுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்று வருகின்றனர்.

    கடந்த பிப்ரவரி ஒரு கிலோ பட்டுக்கூடு 700 முதல், 800 ரூபாய் வரை விற்றது. வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக திடீரென குறைந்த பட்டு நூல் விலையால், பட்டுக்கூ டுகளின் விலையும் கடும் சரிவை சந்தித்தது. இதனால் பட்டுக்கூடு உற்பத்தி விவ சாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவ சாயிகள் நலச்சங்க தலைவர் செல்வராஜ் கூறிய தாவது:- பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் சீதோஷ்ண நிலை மாற்றம், நோய் தாக்குதல், நிலையில்லாத விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்ற னர்.தமிழகத்திலுள்ள பட்டுக்கூடு அங்காடிகளில் உரிய விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் கர்நாடக மாநிலத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்லும் சூழல் உள்ளது.கர்நாடக மாநிலத்தில் பட்டுக்கூடு, பட்டுநூல் உற்பத்தி பிரதானமாக உள்ள நிலையில் அம்மாநில அரசு, விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ. 50 ஊக்கத்தொகை வழங்கு கிறது.ஆனால் தமிழக மார்க்கெட்களில் பட்டுக்கூடுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ஒரு கிலோவுக்கு 100 முதல் 200 ரூபாய் வரை குறைவாகவே கிடைத்து வருகிறது.

    இதனால் இங்குள்ள விவசாயிகள் 60 சதவீதம் பேர், கர்நாடக மார்க்கெ ட்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் தமிழக அரசு க்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதோடு விவ சாயிகளும் பல கி.மீ.,தூரம் கடந்து வேறு மாநிலத்திற்கு பட்டுக்கூடு விற்பனைக்கு கொண்டு செல்லும் அவலம் நீடிக்கிறது.கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக மார்க்கெட்டிலும், அதனை தொடர்ந்து தமிழகத்திலும், பட்டு நூல்விலை திடீரென குறைந்தது, பட்டுக்கூடு விலை கடுமையான சரிவை சந்தித்தது. கிலோ ரூ. 400-450 ஆக குறைந்தது.

    உடனடியாக கர்நாடக மாநில விவசாயிகளிடம், அம்மாநில அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி கர்நாடக மாநில கச்சா பட்டு விற்பனை கமிட்டி வாயிலாக கச்சா பட்டு நூல் கொள்முதல் செய்யப்பட்டது.ஒரு சில நாட்களில் அம்மாநிலத்தில் பட்டுக்கூடு விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில், பட்டுக்கூடு விலை உயரவில்லை.

    தற்போதைய நிலவரப்ப டி, சராசரியாக ஒரு கிலோ, கோவை மார்க்கெட்டில் ரூ.469, உடுமலை ரூ.543, தேனி, ரூ.560 என்ற அளவிலேயே விலை காணப்பட்டது.

    இளம் புழு, இடு பொருள், மல்பெரி உரம், ஒரு மாதம் வளர்ப்பு மனை பராமரிப்பு, கூலி என உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில் விலை சரிவால் பட்டு க்கூடு உற்பத்தி விவசாயி கள் கடுமையாக பாதிக்க ப்பட்டுள்ளனர்.எனவே கர்நாடக அரசை, தமிழக அரசும் பின்பற்றி பட்டு க்கூடுகளுக்கு உரிய விலை கிடைக்கவும், ஊக்க த்தொகை வழங்கவும், வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக, பட்டு நூல் விலை சரிவை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×