என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மானியத்தில் காய்கறி நாற்றுகள் விநியோகம் - விவசாயிகள் பயன்பெற அழைப்பு
- 300 பயனாளிகளுக்கு தலா 5 விதமாக பழச்சாகுபடி காய்கறிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள் மானியத்தில் பெறலாம்.
- பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூலனூர்:
மூலனூர் வட்டாரத்தில் மானியத்தில் விவசாயிகளுக்கு காய்கறி நாற்றுகள் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் பயன்பெறும்மாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மூலனூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மூன்று சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தோட்டக்கலை மற்றும் மலை பயிர் துறை திட்டங்களை பயன்பெற https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளம் வாயிலாக அல்லது மூலனூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2023-24 கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம ஊராட்சிகள் பெரமியம், எரசனம் பாளையம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறலாம். இதில் 300 பயனாளிகளுக்கு தலா 5 விதமாக பழச்சாகுபடி காய்கறிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள் மானியத்தில் பெறலாம்.
மேலும் பண்ணை குட்டை அமைத்தல், குறைந்த விலையில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், தேனீ வளர்த்தல், நகரும் காய்கறி வண்டிகள்,குளிரூட்டப்பட்ட வண்டி ஆகியவை குறைந்த விலையில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வண்டி வாங்க மானியம் வழங்கப்படும்.
பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்த செலவினம் ரூ. 2 லட்சம் ஆகும். இதற்கான 50 சதவீத மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. எனவே காளான் உற்பத்தி கூடம்அமைக்கும் பெண் விவசாயிகள் மட்டும் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம். தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை 9677776214, 9790526223 என்ற எண்களில் ெதாடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்