என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதம் மாறியவா்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகைகள் வழங்க கூடாது - இந்து முன்னணி வலியுறுத்தல்
திருப்பூர்:
மதம் மாறியவா்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகைகள் வழங்கக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கிறிஸ்தவா்களாக மதம் மாறியவா்களுக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மக்களவையில் பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. அவரது பேச்சானது அம்பேத்கா் இயற்றிய இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது.
இட ஒதுக்கீடு சலுகைகள் என்பது சமூகநீதிக்கானது என்றும், மற்ற மதங்களுக்கு இது பொருந்தாது என்றும் அரசியல் சாசன சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே, அவரது கோரிக்கை இந்து சமூகத்தை சீரழிக்கும் என்பதால் மதம் மாறியவா்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகைகள் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.