search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கு கைகொடுக்கும் `கருடா செயலி
    X

    கோப்புபடம்.

    வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கு கைகொடுக்கும் `கருடா செயலி'

    • 2 நாட்கள் ஆதார் இணைப்புக்கான சிறப்பு முகாம் நடந்தது.
    • கல்லுாரி மாணவர்கள் செல்போன் ஆப் சகிதமாக, சேவையில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    தேர்தல் கமிஷன் எடுத்த அதிரடி முடிவால் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு சாத்தியமாகியுள்ளது. நீண்ட நாள் குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரே வாக்காளர் பல தொகுதிகளில் இடம்பெறுவது இனி முற்றிலும் களையப்படும்.தேர்தல் கமிஷன் வாரத்தில் ஒரு நாள் சிறப்பு முகாம் நடத்த அறிவுறுத்தியிருந்தது.

    தொழிலாளர் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் ஆதார் இணைப்புக்கான சிறப்பு முகாம் நடந்தது.8 சட்டசபை தொகுதிகளில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் முகாம் நடந்தது. ஆதார் இணைப்புக்காக, 'படிவம் -6 பி' யுடன் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் காத்திருந்தனர்.

    கல்லுாரி மாணவர்கள் செல்போன் ஆப் சகிதமாக, சேவையில் ஈடுபட்டனர். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் படிவம் வைத்திருந்தாலும், இளம் வாக்காளர் நேரடியாக ஆன்லைன் வாயிலாக இணைக்கவே ஆர்வம் காட்டினர். அதற்காகவே ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் வசம் உள்ள, கருடா ஆப் இம்முறை எதிர்பாராத வகையில் கைகொடுத்துள்ளது.

    ஒவ்வொரு நாளும் தலா 40 ஆயிரத்துக்கும் அதிகமான ஆதார் இணைப்பு நடந்துள்ளது. அவற்றில் 90 சதவீதம் 'கருடா ஆப்' வாயிலாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இவ்வளவு நாட்களாக ஆர்வம் காட்டாமல் இருந்த இளம் வாக்காளர் சிறப்பு முகாமை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த ஒரு மாதமாக ஆதார் இணைப்பு நடந்தும் திருப்பூர் மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. கடந்த, 2ந் தேதி மொத்த வாக்காளரில் 16.45 சதவீதம் பேர் ஆதார் இணைப்பு செய்திருந்தனர். சிறப்பு முகாமின் முதல் நாளான 3-ந் தேதி மாலை நிலவரப்படி 19 சதவீதம் பேர் ஆதார் விவரத்தை இணைத்திருந்தனர்.இதுகுறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், 8 தொகுதிகளிலும், 2 நாட்கள் நடந்த முகாமை வாக்காளர்கள் அதிகம் பயன்படுத்திக்கொண்டனர். முதல் நாளில் 47 ஆயிரத்து, 895 பேரும், இரண்டாம் நாளில் 42 ஆயிரத்து 472 பேரும் ஆதார் இணைத்திருந்தனர்.2 நாட்களில் 90 ஆயிரத்து 367 பேர் ஆதார் இணைத்துள்ளனர் என்றனர்.

    Next Story
    ×