என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஆடி மாதம் தொடங்க உள்ளதால் ஆடுகள் விற்பனை மந்தம் ஆடி மாதம் தொடங்க உள்ளதால் ஆடுகள் விற்பனை மந்தம்](https://media.maalaimalar.com/h-upload/2023/07/09/1912152-06goatsales.webp)
கோப்பு படம்.
ஆடி மாதம் தொடங்க உள்ளதால் ஆடுகள் விற்பனை மந்தம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடந்த 2 வாரங்களாக பக்ரீத் மற்றும் கோவில் திருவிழாக்கள் காரணமாக நல்ல விலை கிடைத்தது.
- அதிக அளவில் ஆடுகளை ஏற்றி வந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
மூலனூர்:
தமிழகத்தில் நடைபெறும் முக்கிய ஆட்டுச் சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களாக பக்ரீத் மற்றும் கோவில் திருவிழாக்கள் காரணமாக நல்ல விலை கிடைத்தது.தற்போது ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆடுகளின் விலை குறைந்துள்ளது. இதனால் ஆடுகளின் விலை சற்று குறைவாகவே இருந்தது. இந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.550-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக நல்ல விலை கிடைத்ததை நம்பி அதிக அளவில் ஆடுகளை ஏற்றி வந்த விவசாயிகளுக்கு இந்த வாரம் ஏமாற்றமே கிடைத்தது.
அதன் அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை ரூ.5,500 ஆகும். இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.