என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்
- சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- சீரமைக்கும் வரை அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின்சேவைமென்பொருளை பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப குழுவின் உதவியுடன் பாதிக்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் தற்பொழுது சரி செய்யப்பட்டுள்ளன.
மேலும் கேபிள் ஆப்ரேட்டர்கள் நேரடியாக செட்டாப் பாக்ஸ்களில் சில மாற்றங்களை செய்து அதை இயக்கும் தற்காலிக தீர்வு குறித்தும் விளக்கப்பட்டு தற்காலிக தீர்வுகாணப்பட்டு வருகிறது. மேற்படி பாதிப்புகளை முழுமையாக சரி செய்ய தொழில்நுட்பக் குழு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மேற்படி தற்காலிக பிரச்சனையை சீரமைக்கும் வரை அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.