என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
2ம் பருவ பாடப்புத்தகங்கள் பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைப்பு
- புத்தகங்களை அந்தந்த வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
- பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றனர்.
திருப்பூர்:
காலாண்டு தேர்வு தொடங்கிய ஓரிரு நாளில், இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் சென்னையில் இருந்து திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தெற்கு பகுதி பள்ளிகளுக்கான புத்தகம், நோட்டுகள் குப்பா ண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், வடக்கு பகுதி பள்ளிகளுக்கு புத்தகங்கள் 15 வேலம்பாளையம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் இருப்பு வைக்கப்ப ட்டிருந்தது. தேர்வு முடிவடைந்ததை தொடர்ந்து, புத்தகங்களை அந்தந்த வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை, மொழிப்பாடம், பிற பாடங்கள் உட்பட 70 ஆயிரம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஐந்தாம் வகுப்புக்கு 14 ஆயிரம் புத்தகங்கள், குறைந்தபட்சமாக ஒன்றாம் வகுப்புக்கு 79 ஆயிரம் புத்தகங்கள் வந்துள்ளன.
இவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் வசம் ஒப்படைக்கப்படும். பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றனர்.