search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நூலக நண்பர்கள் திட்டத்தில்தன்னார்வலர்கள் 3 பேருக்கு அடையாள அட்டை
    X

    தன்னார்வலர்கள் 3 பேருக்கு அடையாள அட்டை வழங்கும் போது எடுத்த படம்.

    நூலக நண்பர்கள் திட்டத்தில்தன்னார்வலர்கள் 3 பேருக்கு அடையாள அட்டை

    • 3பேருக்கு அடையாள அட்டை மற்றும் நூல்கள் எடுத்துச் செல்லும் பை வழங்கப்பட்டது
    • தன்னார்வலர்கள் நூலகத்திற்கு நேரடியாக வர இயலாதவர்களுக்கு நூல்களை வழங்குவர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் ஊர் புற நூலகத்தில் நூலக நண்பர்கள் திட்டத்தில் தன்னார்வலர்கள் 3பேருக்கு அடையாள அட்டை மற்றும் நூல்கள் எடுத்துச் செல்லும் பை வழங்கப்பட்டது. நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்ட தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மளிகை செல்வம், வாசகர் வட்ட உறுப்பினர் லட்சுமிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் மலர்க்கொடி வரவேற்றார்.

    தன்னார்வலர்கள் நூலகத்திற்கு நேரடியாக வர இயலாதவர்களுக்கு நூல்களை வழங்குவர். இவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நூலகங்களில் உறுப்பினராக சேர்க்கவும் ஒரு முறை அதிகபட்சமாக 25 நூல்கள் வரை எடுத்துச் சென்று நூலக உறுப்பினர்களின் இல்லங்களுக்கு நேரடியாக வழங்கி வரும் இந்த திட்டத்தில் பத்மாவதி, கற்பகம், ராமராஜன் ஆகியோர் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நூல் எடுத்து செல்லும் பை வழங்கப்பட்டது.

    Next Story
    ×