என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழையகோட்டை மாட்டுச்சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.21 லட்சத்துக்கு விற்பனை
- ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் காங்கேயம் இன மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 95 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
- அதிகபட்சமாக 3 மயிலைப் பசுக்கள் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்துக்கு விற்பனையாயின.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம் காங்கயத்தை அடுத்துள்ள பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் காங்கேயம் இன மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 95 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் 45 மாடுகள் ரூ.21 லட்சத்துக்கு விற்பனையாயின. அதிகபட்சமாக 3 மயிலைப் பசுக்கள் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்துக்கு விற்பனையாயின.
Next Story






