என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திறந்த வெளியில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் அபராதம் காங்கயம் நகராட்சி எச்சரிக்கை
- ஆடு, கோழி, மீன் போன்றவற்றில் மீதமாகும் இறைச்சிக் கழிவுகளை நகராட்சி வாகனம் மூலம் தினமும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
- இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
காங்கயம் :
திறந்த வெளியில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படுவதோடு, கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று காங்கயம் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
காங்கயம் நகராட்சி பகுதியில் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் இறைச்சிக்காகப் பயன்படுத்தும் ஆடு, கோழி, மீன் போன்றவற்றில் மீதமாகும் இறைச்சிக் கழிவுகளை நகராட்சி வாகனம் மூலம் தினமும் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது ஒரு சில இறைச்சிக் கடைகளில் இறைச்சிக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.எனவே இது போன்று திறந்த வெளியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவது கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். அத்துடன், கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.