search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு லட்சுமி ஹயக்ரீவர் யாக பூஜை நடந்தது
    X

    பிளஸ்-2 மாணவர்களுக்கு லட்சுமி ஹயக்ரீவர் யாக பூஜை நடைபெற்றதை படத்தில் காணலாம்.

    திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு லட்சுமி ஹயக்ரீவர் யாக பூஜை நடந்தது

    • திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு லட்சுமி ஹயக்ரீவர் யாகபூஜை நடத்தப்பட்டது.
    • யாகபூஜை காலை 9 மணிக்கு சிறப்பு வேள்வியுடன் தொடங்கியது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு லட்சுமி ஹயக்ரீவர் யாகபூஜை நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் நல்ல நினைவாற்றலுடனும், தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த பூஜை நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான பூஜை கடந்த 26-ந் தேதி திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் தொடங்கியது. இதில் பிளஸ்-2 மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 3-வது வாரமாக இன்று நடைபெற்ற இந்த யாகபூஜை காலை 9 மணிக்கு சிறப்பு வேள்வியுடன் தொடங்கியது.

    இந்த பூஜையையொட்டி மாணவ-மாணவிகளின் பெயர் மற்றும் நட்சத்திரங்கள் உச்சரிக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. முடிவில் மாணவர்கள் அனைவருக்கும் பூஜிக்கப்பட்ட கயிறு, ஹயக்ரீவர் சுலோக அட்டை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×