என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இந்திய தண்டனை சட்டத்தின் பெயர்களை இந்தி மொழியில் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
- சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியில் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.
- சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
திருப்பூர்:
குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியில் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்தும் அதை திரும்பப் பெறக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
அதன்படி இன்று திருப்பூர் கோர்ட்டு வளாகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் துணைத் தலைவர் சிவபிரகாசம், அட்வகேட் அசோசியேசன் சங்க தலைவர் ரகுபதி, நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் சுந்தரேஸ்வரன் செயலாளர் பத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தின் போது ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.