என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![எரிவாயு குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியில் சிக்கிய லாரி எரிவாயு குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியில் சிக்கிய லாரி](https://media.maalaimalar.com/h-upload/2023/04/12/1864744-untitled-1.webp)
தோண்டப்பட்ட குழியில் சிக்கிக்கொண்ட லாரியை படத்தில் காணலாம்.
எரிவாயு குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியில் சிக்கிய லாரி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தோண்டிய குழிகளை சரிவர மூடாமல் விடுவது என அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர்.
- பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பல்லடம் :
பல்லடம்- திருப்பூர் மெயின் ரோட்டில் தனியார் நிறுவனத்தினர் எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முறையாக பணிகளைச் செய்யாமல் பகல் நேரங்களில், குழிகளை தோண்டுவது, தோண்டிய குழிகளை சரிவர மூடாமல் விடுவது என அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார்தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே உள்ளசின்னக்கரை பகுதியில் சென்ற சரக்கு லாரி ஒன்று எரிவாயு குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிக்கொண்டது.ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் குழியில் இருந்து லாரியை எடுக்க முடியவில்லை. இதனால் பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் லாரி மீட்கப்ப ட்டது. எரிவாயு குழாய் பதிக்கும் பணியை முறை ப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.