என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம்
- கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
- பெண் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள மானாசிபாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் சிவராமகிருஷ்ணன். இவர் திருப்பூர், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரது மகள் ரம்யாவை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். பெண் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு ரம்யா வெளியேறினார். பின்னர் கோவை மாவட்டம், சூலூர் வட்டம், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் சிவராம கிருஷ்ணனும், ரம்யாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு அவர்கள் இருவரும் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அப்போது தனது பெற்றோர் எங்களை பிரிக்க முயற்சிப்பதாகவும், எனவே தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் ரம்யா போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரம்யாவின் வயது சான்றிதழை ஆய்வு செய்த போது அவர் மேஜர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது விருப்பப்படி கணவர் சிவராமன் வீட்டிற்கு செல்லலாம் என்று தெரிவித்தனர் .இதையடுத்து புதுமண தம்பதிகள் இருவரும் மானாசிபாளையத்தில் உள்ள சிவராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றனர்.