என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் மின்வாரிய தொ.மு.ச. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- ஒப்பந்ததொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக தொமுச சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
- வருகிற 18ம் தேதி ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தர கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது.
திருப்பூர் :
தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் போயம்பாளையம் சக்தி நகரில் நடைபெற்றது.
மாநில இணைபொதுச் செயலாளர் ஈ.பி.சரவணன் தலைமை வகித்தார்.மாநில தலைவர் பண்டித் துரை கலந்து கொண்டு பேசுகையில், 'ஒப்பந்ததொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதன்படி வருகிற 18ம் தேதி சென்னை ரோம்பேட்டையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தர கோரிக்கை மற்றும் திமுக ஆட்சியின் 2 ஆண்டு கால சாதனை விளக்க கூட்ட மாநாடு நடைபெற உள்ளது' என்றார். தொடர்ந்து அதன் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழை பாண்டிதுரைவெளியிட சரவணன் பெற்றுக்கொ ண்டார்.
கூட்டத்தில் மாநில துணை தலைவர் பெருமாநல்லூர் செந்தில் (எ ) பழனிசாமி, பொருளாளர் இம்மானுவேல், கூடுதல் பொதுச்செயலாளர் செங்கை சுரேஷ், செயல் தலைவர் தஞ்சை மோகன், திருப்பூர் நிர்வாகிகள் சுரேஷ், மோகன், ஜோதிபாசு, பிரான்சிஸ்சேவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.