search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதப்பூர் மாகாளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
    X

    மாகாளியம்மனுக்கு 108 கலசபூஜையுடன் 108 சங்காபிஷேகமும் நடைபெற்ற காட்சி.

    மாதப்பூர் மாகாளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

    • 200ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது.
    • நவம்பர் 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே மாதப்பூரில் சுமார் 200ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற ஆகம விதிப்படி கடந்த நவம்பர் 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடைபெற்றது. மண்டல பூஜையின் நிறைவு நாளான 48ம் நாள் பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை ,புண்யாஹவாசனம் அதனை தொடர்ந்து மாகாளியம்மனுக்கு 108 கலசபூஜையுடன் 108 சங்காபிஷேகமும் நடைபெற்றுது.நிறைவாக தீபாராதனை நடைபெற்றது.மண்டல பூஜையை முன்னிட்டு தொடர்ந்து 48 நாட்களாக அன்னதானம் வழங்கப்பட்டது.மண்டல பூஜையை தென் சேரி மலை ஆதீனம் முத்து சிவ இராமசாமி அடிகளார் தலைமையில், அடிகளார் பெருமக்கள் நடத்தி வைத்தனர்.

    Next Story
    ×