search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே ரூ.4 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
    X

    அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தடுப்பணை கட்டும் பணியினை தொடங்கி வைத்த காட்சி.  

    வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே ரூ.4 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

    • 1981 ம் ஆண்டு 6040 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் கட்டப்பட்டது.
    • கிராமத்தில் தொடங்கி 60 கி.மீ பயணித்து அமராவதி ஆற்றில் கலக்கிறது.

    குண்டடம் :

    தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் தலைமையில் திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம் வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது :- குண்டடம் ஊராட்சி ஒன்றியம், வடசின்னாரிபாளையம் ஊராட்சி, குங்காருபாளையத்தில் ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கம் 1981 ம் ஆண்டு 6040 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் கட்டப்பட்டது. வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 268.04 மில்லியன் கன அடியாகும்.

    வட்டமலைக்கரை ஓடையானது அமராவதி ஆற்றின் கிளை ஆறு ஆகும். இந்தஓடை பல்லடம் பொள்ளாச்சி சாலையில், அனுப்பட்டி கிராமத்தில் தொடங்கி 60 கி.மீ பயணித்து அமராவதி ஆற்றில் கலக்கிறது.

    இத்தடுப்பணையானது 50 மீட்டர் நீளத்திலும், 1.5 மீட்டர் உயரத்திலும், சுமார் ஒரு நிரப்புக்கு 0.50 மில்லியன் கனஅடி வீதம் மொத்தம் 3 நிரப்புகளுக்கு 1.50 மில்லியன் கனஅடி கொள்ளளவு நீரை தேக்கி வைக்கும் வகையில் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பணை கட்டப்படுவதால் மேற்படி சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 704 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாக பாசனம் பெறும். மேலும் இத்தடுப்பணையின் 1 கி.மீ சுற்றளவில் உள்ள 56 கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளின் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். இதனால் விவசாய உற்பத்தி மற்றும் குடிநீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    Next Story
    ×