search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில்   23-ந்தேதி ஜமாபந்தி தொடக்கம்
    X

    கோப்புபடம்.

    உடுமலையில் 23-ந்தேதி ஜமாபந்தி தொடக்கம்

    • வருவாய்த் துறையின் ஓராண்டு கணக்கு விவரங்களை தணிக்கை செய்து சரி பார்த்து ஒப்புதல் அளிக்க ஜமாபந்தி நடத்தப்படுகிறது.
    • ஜமாபந்தியில் அவற்றை சமர்ப்பித்து ஜமாபந்தி அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

    உடுமலை:

    உடுமலையில் வரும் 23-ந் தேதி ஜமாபந்தி துவங்குகிறது.வருவாய் துறை சார்பில் உடுமலை தாலுகாவில் வரும் 23-ந் தேதி ஜமாபந்தி துவங்குகிறது.வருவாய்த் துறையின் ஓராண்டு கணக்கு விவரங்களை தணிக்கை செய்து சரி பார்த்து ஒப்புதல் அளிக்க ஜமாபந்தி நடத்தப்படுகிறது.

    வருவாய் கிராம அளவில் பட்டா ,சிட்டா, புல வரைபடம் ,அ பதிவு, பிறப்பு, இறப்பு ,விவசாயப் பணி மகசூல் என 24 வகையான பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. மேலும் நிலஅளவைக்கு பயன்படுத்தப்படும் நில அளவை சங்கிலிகளும் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளன.

    ஜமாபந்தியில் அவற்றை சமர்ப்பித்து ஜமாபந்தி அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும். மேலும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் முன்னிலையில் நடக்கும் ஜமாபந்தி நிகழ்வில் கிராம வாரியாக பொது மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது.

    அவ்வகையில் உடுமலை வட்டத்தில் உள்ள கிராமங்களின் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) திருப்பூர் தனி துணை ஆட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையில் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 23-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    23-ந்தேதி உடுமலை உள் வட்டம் சின்ன வீரம்பட்டி, குறுஞ்சேரி ,அந்தியூர் ,வெனசுப்பட்டி, கணபதிபாளையம், உடுமலை, பெரியகோட்டை ,கணக்கம்பாளையம், தென்பூதி நத்தம், பூலாங்கிணறு ,ராகல் பாவி, ரா .வேலூர் ,வடபுதினத்தம், போடி பட்டி, கணக்கம்பாளையம், 1 கணக்கம்பாளையம் 2 ஆகிய கிராமங்கள்.

    24 ந் தேதி குறிச்சி கோட்டை உள் வட்டம் ஜல்லிபட்டி, லிங்கம்மாவூர், வெங்கடாபுரம் ,சின்ன குமாரபாளையம். குறிச்சிக்கோட்டை, பள்ளபாளையம், ஆலாம்பாளையம், தும்பலபட்டி, தளி , போகி கவுண்டன் தாசர்பட்டி ,குரல் குட்டை, குருவப்பநாயக்கனூர், ஆண்டிய கவுண்டனூர் 1, ஆண்டிய கவுண்டனூர் 2,மானுப்பட்டி,எலையமுத்தூர், கல்லாபுரம் உள்ளிட்ட கிராமங்கள்.

    25 ந் தேதி பெரிய வாளவாடி உள் வட்டம் வலைய பாளையம், எரிசனம்பட்டி,கொடுங்கியம் ,தின்னப்பட்டி, சர்க்கார் புதூர், ரெட்டிபாளையம், ஜிலேபி நாயக்கன்பாளையம், அரசூர் ,கிருஷ்ணாபுரம் ,சின்ன பாப்பனூத்து,பெரிய பாப்பனூத்து ,உடுக்கம்பாளையம், புங்க முத்தூர் ,செல்லப்பம்பாளையம், தேவனூர் புதூர் ,ராவணாபுரம் ,பெரிய வாளவாடி, சின்ன வாளவாடி, தீபாலப்பட்டி ,மொடக்குபட்டி உள்ளிட்ட கிராமங்கள்.

    26 ந் தேதி குடிமங்கலம் உள் வட்டம் பூளவாடி ,ஆத்து கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, பெரிய பட்டி ,குப்பம்பாளையம் ,ஆமந்தகடவு, வடுகபாளையம் ,குடிமங்கலம், கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம் உள்ளிட்ட கிராமங்கள்.

    30ந் தேதி பெதப்பம்பட்டி உள் வட்டம் மூங்கில் தொழுவு ,வாகை தொழுவு ,வீரம்பட்டி, பொங்கல் நகரம், சோமவாரப்பட்டி, தொட்டம்பட்டி, முக்கூடு, ஜல்லிபட்டி, கொசவம்பாளையம், அணிக்கடவு, விருகல்பட்டி ,புதுப்பாளையம், இலுப்ப நகரம் ,பண்ணை கிணறு ஆகிய கிராமங்கள்.

    Next Story
    ×