search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யார்டு பராமரிப்பு பணியால்  38 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
    X

    கோப்புபடம். 

    யார்டு பராமரிப்பு பணியால் 38 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து

    • வடமாநிலங்கள் வழியாக பயணிக்கும் 38 ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • ஜனவரி 24, 31-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    வடக்கு மத்திய ெரயில்வேக்கு உட்பட்ட ஆக்ரா - மதுரா வழித்தடத்தில் யார்டு மறுவடிவமைப்பு பணி நடக்கிறது.இதனால் கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்கள் வழியாக பயணிக்கும் 38 ெரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    8 ெரயில்கள் வழித்தடம் 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மாற்றப்பட்டுள்ளது. எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் மில்லேனியம் எக்ஸ்பிரஸ் (எண்:12645) 2024 ஜனவரி 6, 13, 20, 27 மற்றும், பிப்ரவரி 3 ந்தேதி, மறுமார்க்கமாக நிஜாமுதீன் - எர்ணாகுளம் ெரயில் (எண்:12646) ஜனவரி 9, 16, 23, 30 பிப்ரவரி 6ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    வைஷ்ணவி தேவி கோவில் - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (எண்:16318) ஜனவரி 15, 22, 29, பிப்ரவரி 5-ந் தேதியும், மறுமார்க்கமாக கன்னியாகுமரி - கட்ரா ெரயில் (எண்:16317) ஜனவரி 12, 19, 26, பிப்ரவரி 2-ந் தேதி முழுவதும் ரத்தாகிறது.

    கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக பயணிக்கும் கொங்கு எக்ஸ்பிரஸ் (எண்:12647) 2024 ஜனவரி 21, 28ந்தேதி, மறுமார்க்கமாக கோவை வருகையில் ஜனவரி 24, 31-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    திருவனந்தபுரம் - புதுடெல்லி கேரளா எக்ஸ்பிரஸ் (எண்:12625) ஜனவரி 27, பிப்ரவரி 3-ந்தேதி ரத்தாகிறது. திருவனந்தபுரம் திரும்பும் ெரயில் (எண்:12626) ஜனவரி 29, பிப்ரவரி 5-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.இத்துடன் சென்னை, மதுரை, நெல்லையில் இருந்து வடமாநிலங்களுக்கு பயணிக்கும் 38 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இத்தகவலை சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×