search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலை இல்லாததால் தக்காளி விளைநிலங்களில்  கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும்  விவசாயிகள்
    X

    கோப்புபடம். 

    விலை இல்லாததால் தக்காளி விளைநிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் விவசாயிகள்

    • கடந்த சில நாட்களாக தக்காளி விலை சந்தையில் குறைந்துள்ளது.
    • இறுதி காய்ப்பு தருணத்தில் உள்ள செடிகளை, அப்படியே அழித்து வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.குழித்தட்டு முறை நடவு, சொட்டு நீர் பாசனம், நீரில் கரையும் உரங்கள் என புதிய தொழில்நுட்பங்களால் மகசூல் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் சீசன் சமயங்களில் விலை கிடைப்பதில்லை.குறிப்பாக கோடை காலத்தில் சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சியடைகிறது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை சந்தையில் குறைந்துள்ளது. விளைநிலங்களில் இருந்து பறித்து வாடகை கொடுத்து சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் செலவுக்குக்கூட கட்டுபடியாகாத விலை நிலவரம் உள்ளது.

    எனவே இறுதி காய்ப்பு தருணத்தில் உள்ள செடிகளை, அப்படியே அழித்து வருகின்றனர். மேலும் சிலர் விளைநிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு தக்காளி செடிகளை தீவனமாக வழங்குகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஆண்டுதோறும் முக்கிய சீசனில் தக்காளி விலை வீழ்ச்சியடைவது தொடர்கதையாக உள்ளது. இருப்பு வைத்து விற்பனை செய்யவும் வசதியில்லை. போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால் அறுவடை செலவும் அதிகரித்து விட்டது.எனவே கட்டுப்படியாகாது என்ற நிலை ஏற்படும் போது தக்காளி அறுவடையை நிறுத்தி விட்டு செடிகளை அழித்து விடுகிறோம். தக்காளியை மதிப்பு கூட்டி விற்பதற்கான தொழில்நுட்பங்கள் எளிதானால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றனர்.

    Next Story
    ×