search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேம்பாட்டு பணிகளுக்காக திருப்பூர் ரெயில் நிலையத்தில் பழைய கட்டிடங்கள் அகற்றம்
    X

    கோப்புப்படம்

    மேம்பாட்டு பணிகளுக்காக திருப்பூர் ரெயில் நிலையத்தில் பழைய கட்டிடங்கள் அகற்றம்

    • தலைமை தபால் அலுவலகம் முதல் நுழைவு வாயில் வரையிலான,50 மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக பணி நடக்கிறது.
    • 2வது பிளாட்பார்ம் அருகே பயன்பாடு இல்லாமல் காலியாக உள்ள குடியிருப்பு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருப்பூர் ெரயில்வே நிலையத்தில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 6ந் தேதி, பிரதமர் மோடி பணிக்கு அடிக்கல் நாட்டினார். முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளது.

    ெரயில் டிக்கெட் முன்பதிவு மையம், ஏ.டி.எம்., அருகே துவங்கி ரெயில் நிலையம் முகப்பு பகுதி முழுவதும் அளவீடு செய்யப்பட்டு, குழி தோண்டப்பட்டது. பணி நடக்கும் இடத்துக்கு பயணிகள் வருவதை தவிர்க்க, பாதுகாப்பு கருதி முதல் பிளாட்பார்ம் நுழைவு வாயில் தகரம் வைத்து அடைக்கப்பட்டது.

    இதற்கு மாற்றாக அருகே வலதுபுறம் சுவர் இடிக்கப்பட்டு தற்காலிகமாக பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக பயணிகள் உள்ளே, சென்று வர ெரயில்வே போலீசார் அறிவுறுத்தினர். தலைமை தபால் அலுவலகம் முதல் நுழைவு வாயில் வரையிலான,50 மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக பணி நடக்கிறது.அதன்பின் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒவ்வொரு பகுதியாக தேர்வு செய்து பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு கட்டுமான பணி துவங்க உள்ளது.

    ஒரே நேரத்தில் இரண்டு பிளாட்பார்ம்களிலும் பணிகள் நடந்தால் இடையூறு ஏற்படும் என்பதால் முதல் பிளாட்பார்மில் மட்டும் பணி துவங்கியுள்ளது.இரண்டாவது பிளாட்பார்மில் எந்த பணியும் தற்போதைக்கு துவங்கவில்லை. 2வது பிளாட்பார்ம் அருகே பயன்பாடு இல்லாமல் காலியாக உள்ள குடியிருப்பு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணி துவங்க உள்ளதால் பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட உள்ளன.

    Next Story
    ×