search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்ல விலை கிடைப்பதால்  சூரியகாந்தி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
    X

    கோப்புபடம். 

    நல்ல விலை கிடைப்பதால் சூரியகாந்தி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

    • விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியை படிப்படியாக குறைத்தனர்.
    • கிளி, மயில் உள்ளிட்ட பறவைகள் சூரியகாந்திக்கு அதிக சேதம் விளைவிக்கின்றன.

    திருப்பூர்:

    வெங்காயம், தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறி பயிர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகளுக்கு, கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை.காய்கறி பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தொடர் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள் பாதுகாப்பான மாற்று பயிர் சாகுபடிக்கு மாற துவங்கியுள்ளனர்.முன்பு திருப்பூர் மாவட்டத்தில் கணிசமான பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது.

    காலநிலை மாற்றம், விலை வீழ்ச்சி போன்ற பிரச்னைகள்தலை தூக்கியதால் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடியை படிப்படியாக குறைத்தனர்.வெள்ளகோவில், மூலனூர் பகுதியில் மட்டும் சிறிய பரப்பில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது சூரியகாந்தி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விலை போகிறது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் சூரியகாந்தியின் பக்கம் கவனம் செலுத்த துவக்கியுள்ளனர். விவசாயிகள் கூறுகையில், காலநிலை மாற்றத்தால் பருவம் தவறிப் பெய்யும் மழையால் மகரந்த சேர்க்கை ஏற்படாமல் விளைச்சல் கிடைப்பதில்லை. சூரியகாந்திக்கு கார்த்திகை மற்றும் வைகாசி பட்டம் சிறந்தது.அறுவடை நேரத்தில் நல்ல வெயில் கிடைக்க வேண்டும். உயிர்வேலி அழிப்பு, காடழிப்பு போன்றவற்றால் பறவைகளுக்கு உணவு தட்டுப்பாடு நிலவுகிறது.

    கிளி, மயில் உள்ளிட்ட பறவைகள் சூரியகாந்திக்கு அதிக சேதம் விளைவிக்கின்றன. சாகுபடி அதிகரிக்கும் போது சேதம் குறையும். பருவநிலை மாற்றம் சூரியகாந்தி சாகுபடியை தீர்மானிக்கிறது. இதற்கு அரசு தான் தீர்வு காண வேண்டும் என்றனர்.

    Next Story
    ×