என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மக்களை தேடி மருத்துவ ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை
- பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தின் அமைப்பு மாநாடு தாராபுரத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.இதில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவதைப்போல அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்.
பணி ஓய்வின்போது பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக மாவட்டத் தலைவராக கவிதா, செயலாளராக சாந்தாமணி, பொருளாளராக மகாலட்சுமி, மாவட்ட துணைச் செயலாளராக பானுப்பிரியா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
மாநாட்டில் மாநில பொதுச் செயலாளா் லட்சுமி, மாநிலப் பொருளாளா் மலா்விழி, சிஐடியூ. திருப்பூா் மாவட்டச் செயலாளா் ரங்கராஜ், மாவட்ட துணைத் தலைவா்கள் உண்ணிகிருஷ்ணன், கனகராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.